ரொம்ப நேரம் பொறுத்திருந்து பார்த்து கடுப்பாகி சொன்னான் காதலன்.
"இப்படி வா, என்கூடவே க்ராஸ் பண்ணிடு.."
வாகன நெரிசலான ட்ராபிக்கில் சிவப்பு சிக்னலுக்கு பயந்து எப்படியாவது சிக்னலை தாண்டி விட வேண்டும் என்றே கன வாகனங்களும் சீறிப்பாய்ந்தன. இந்த காதலர்கள் மாலை நேர விளிம்பில் பிரிய மனமில்லாது வீடு திரும்பிய நேரத்தில் பாதசாரிகள் சிக்னல் பச்சை விழாமலே இருந்தது. இதற்கு மேல் காத்திருக்க முடியாது என்று அவள் கையைப்பற்றி குறுக்கே கடந்தான். அவள் பயத்தில் திமிரியபடியே
"ஏய் லூசு, அடிபட்டு சாகப்போறியா..?"
என்று கேட்பதற்குள் சாலையின் பாதி தூரம் வந்துவிட்டாள். தூரத்தில் வந்துகொண்டிருந்த வேன், மின்னல் பொழுதில் அருகே வந்து விட்டது. இவர்கள் சாலையைக்கடந்து விடுவர் எனும் குருட்டு மதிப்பில் வேன் டிரைவர் வேகத்தை மட்டும் சற்று மட்டுபடுத்தி வருவதற்குள் எந்த பக்கமும் செல்லாமல் சிலை போல் நடு ரோட்டில் அப்படியே நின்றுவிட்டாள் அந்தப்பெண். வேன் சடன் ப்ரேக் பிடித்ததில் சற்று நிலை தடுமாறி டயர் கீச்சொலி கிளம்ப வண்டி கோணலாக தேய்ந்து நின்றது. யாருக்கும் அடியில்லை ஆனால் வேன் டிரைவர் கொஞ்சம் மூர்ச்சை ஆகிவிட்டான். காதலன் அவளைத்திரும்பி ரோட்டைக்கடந்தபடியே திரும்பிப்பார்த்தான் . அவள் தற்காப்புக்காக முகத்தைத் தன் கையால் இறுக முடிக்கொண்டு வேன் முன்னே மண்டியிட்டாள் தன்னை அறியாமலே .
துரதிர்ஷ்டவசமாக இந்த நொடிப்பொழுது சம்பவத்தை உணர நேரமில்லாததால் பின்னால் வந்த கார் சடன் ப்ரேக் போட்டும் வேன் மீது இடிக்காமல் லாவகமாக சைடு வர கட்டுப்பாட்டை இழந்து சிக்னலை அடுத்த கடை வாசலில் நின்றிருந்த ஆட்டோ மீது மோதி நின்றது. கூட்டம் கூடிவிட்டது, எங்கும் மரண ஓலம். எல்லோரும் அந்தப்பெண்ணை மட்டும் வசைபாடினர்.அடுத்த நிமிடமே அந்தபெண்ணை பஸ் ஏற்றிவிட்டு அவன் ஷேர் ஆட்டோ பிடித்து தூரப்புள்ளியாக கரைந்து போனான். கூட்டம் ஆம்புலன்ஸ் வந்தும் கரையவே இல்லை.

மறுநாள் காலை பேப்பரின் மூன்றாவது பக்கத்தில் வந்தது செய்தியாக.
விசுக்கென்று குறுக்கே கடந்த மாணவியால்,
சட்டென்று ப்ரேக் பிடிக்க முடியாத கால் டேக்சி, கூட்டத்தில் சீறிப்பாய்ந்தது.

வண்டிகள் டணால்; டிரைவர் பணால்;
பலி 1; படுகாயம் 3;
இப்படியாக சிலரின் துக்கவலியை, பலரின் பொழுதுபோக்காக மாற்றியது தினமயர் பத்திரிக்கை. விலை 300 காசு மட்டுமே.
- அருள் மணிவண்ணன்
No comments:
Post a Comment