பால்ய காலத்திலேயே விகடன் குமுதம் என படிக்கும் பழக்கம் இருந்தும் சாரு என்பவர் ஏதோ பெண் கவிஞர் போல என்றுதான் நினைத்திருந்தேன். பிறகு தான் மனம் கொத்திப்பறவை எனும் தொடர் விகடனில் கண்டேன்.
"பல மணி நேரம் என்னை நடிக்கவைத்து கடைசியில் ஆர்மோனியம் தடவும் விரலை மட்டும்தான் படம் பிடித்தார் இயக்குனர்"
என்ற வரி மட்டும் மொத்த தொடரின் நினைவில் தங்கியிருக்கிறது. அந்த தொடர் புத்தகமாக கிடைத்தால் கூட வாங்க நான் தயாரில்லை. எல்லாம் புதிய எக்சைல் படுத்திய பாடு. அதை வாங்கும் எண்ணம் தோன்றியதற்கு காரணம் அராத்துதான்.