பால்ய காலத்திலேயே விகடன் குமுதம் என படிக்கும் பழக்கம் இருந்தும் சாரு என்பவர் ஏதோ பெண் கவிஞர் போல என்றுதான் நினைத்திருந்தேன். பிறகு தான் மனம் கொத்திப்பறவை எனும் தொடர் விகடனில் கண்டேன்.
"பல மணி நேரம் என்னை நடிக்கவைத்து கடைசியில் ஆர்மோனியம் தடவும் விரலை மட்டும்தான் படம் பிடித்தார் இயக்குனர்"
என்ற வரி மட்டும் மொத்த தொடரின் நினைவில் தங்கியிருக்கிறது. அந்த தொடர் புத்தகமாக கிடைத்தால் கூட வாங்க நான் தயாரில்லை. எல்லாம் புதிய எக்சைல் படுத்திய பாடு. அதை வாங்கும் எண்ணம் தோன்றியதற்கு காரணம் அராத்துதான்.
டிவிட்டரில் பேசுபுக்கில் பதித்த எழுத்துகளை புத்தக வடிவம் கொடுக்கும் அளவு வரை வந்த அராத்துவின் வளர்ச்சி-முயற்சி என்னுள் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. அதன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு பொது அழைப்பு promo என்று அடுக்கடுக்காய் காணவும் ஆர்வம் கூடிவிட்டது இந்த சராசரிக்கு. இதற்கு முன்பு எந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கும் போனதில்லை என்றாலும் இந்த நிகழ்வுக்கு போயே தீர வேண்டும் என்று தீர்மானம் போட்டாயிற்று, நிறைவேறியும்விட்டது.
அந்த புத்தக வெளியீட்டு விழாவில்தான் சாருவின் பேச்சை முதன்முதலில் நான் கேட்டது நேரடியாக. இதற்கு முன்பு டிவியில் தான் கேட்டிருக்கிறேன் ஒரே ஒருமுறை. விண் டிவியில் ஆரண்ய காண்டம் எனும் படம் (தமிழ்ப்படம்தான்) குறித்த சுவராசியமான விமர்சனம் அது. படத்தை அவர் சிலாகித்து சொன்னதும், என் கருத்தும் ஒரே மாதிரியாக இருந்தது நினைத்து மரியாதை கூடியது. அந்த படத்தை. Neo-Noir எனும் சொல் வைத்து வர்ணித்து இருந்தார். அந்த சொல்லை நெட்டில் தேட பல வலைத்தளங்கள் அதன் பங்குக்கு படம் குறித்த ஆர்வத்தையும் சாரு குறித்த மரியாதையும் சேர்ந்தே அளித்தது. அப்படியே அவரது ப்ளாக் முகவரியைக் கண்டுபிடித்து படிக்கலானேன்.
வாசகர் வட்டத்தில் இருந்திருந்தால் எப்படியாவது சாருவைப்பற்றியோ அல்லது அவரது ப்ளாகை பற்றியோ தெரிந்திருக்கும். என்ன காரணம் என்று தெரியவில்லை என்னை நான் எந்த வாசகர் வட்டத்திலும் இணைத்துக்கொள்ளுவதில்லை. அது ஒரு நல்ல விஷயம் தான் என்று படுகிறது, வாசகர் வட்டத்தில் எழும் கருத்து, என் கருத்தின் மீது தாக்கம் இருப்பதில்லை என்பது மட்டும்தான் சாதகமான விஷயமாக இருக்க முடியும். ராஜன்லீக்ஸ் சாருவை மிமிக் செய்யும் பதிவுகளை படித்திருக்கிறேன் அவ்வளவுதான் எனக்கு சாருவைப்பற்றி தெரியும்.
சரி அந்த புத்தக விழாவிற்கு வருவோம். சாரு வெண்ணிறாடையில் விழாவிற்கு வந்திருந்தார். அராத்து-சாரு அன்னியோன்னியம் தெரியாமல் "அட, அராத்து விழாவிற்கு சாருவே வந்துருக்கிறார் போலும் என்று நினைத்துகொண்டேன் அப்பாவியாக. நான்கைந்து பேர் பேசிய பிறகுதான் சாரு மேடையில் பேச வந்தார் என்று நினைக்கிறேன். சுமார் ஒரு மணி நேரம் பேசியிருப்பார் அல்லது அலுப்பு தட்ட பேசியிருப்பார். பேச்செங்கிலும் அடியேன் புராணம்தான். முதன்முறை அத்தகைய அடியேன் புராணத்தை கேட்டிருப்பேன், நேரம் போனதே தெரியவில்லை. அராத்துவின் புத்தகத்தையோ அல்லது அராத்தை பற்றியோ சிறிது நேரம் தான் பேசிருப்பார், தொடர்ச்சியாக வந்தவை அனைத்தும் புதிய எக்சைல் தொடர்பான promo பேச்சுதான் அதிகம். அராத்து எழுத்துலகில் புதிய முகம், அவருக்கே இவ்வளவு பெரிய கூட்டமா என்று நினைத்திருப்பார் போல. "வரும் ஜனவரியில் அடியேனின் நாவல் புதிய எக்சைல் வெளியிட போகிறேன், அந்த புத்தக வெளியீட்டு விழாவில் இதை விட இரண்டு மடங்கு கூட்டம் வரவேண்டும் என்று உத்தரவு போட்டார் ஒரே போடாக". அதன் நீட்சி நீண்டுகொண்டு நீலாங்கரை வரை போனதுபோல் ஞாபகம்.
ஜனவரி வந்தது ஆனால் நான் போகவில்லை எனது நேரமின்மையே காரணம், நல்லவேளை போகவில்லை என்று நினைக்கிறேன் இப்போது. ஆன்லைனில் பாதிவிலைக்கு தள்ளுபடியாய் அறிவித்தது அவர் புத்த"கத்தை" வெளியிடும் கிழக்கு பதிப்பகம். ஆர்டர் செய்து கையில் கிடைத்தபோது கூட மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. புத்தகத்தை படித்து முடித்தவுடன் முதல் வேலையாக தோன்றியது இவைகள்தான்.
1. யவரோ ஒருவர் தனது டைரியை புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார், அதனை திருட்டுத்தனம் வராமல் நாம் விலைகொடுத்து படித்துக்கொண்டிருக்கிறோம்.
2. சமுதாயம் குறித்த கடுப்பை அங்கிங்கு சொல்லிக்கொண்டிருக்கிறார். என் அண்ணன் இதை விட நுட்பமான சமுதாய சிந்தனை உடையவன். சிறந்த எழுத்தாளர் ஆகும் தகுதி இருக்கிறது சாருவின் எழுத்தை அவன் படித்தால் அவனுக்கும் நம்பிக்கை வந்து விடும்.
3. நாவல் முழுக்க தற்பெருமை அசடு வழிகிறது பக்கம் பக்கமாக, சமைப்பதில் தொடங்கி புணர்வது வரை சுய சொறிதல் தான் மிக அதிகமாக இருக்கிறது. என்னைப்பொறுத்தவரையில் நான் எவ்வளவு சாதித்தாலும் எனது பர்சனல் வாழ்க்கையை இப்படி கூறுபோட கூட மனசு வராது. அதன் அவசியமும் யார்க்கும் தேவையா?
4. சபையில் பேசக்கூடாத உறுப்பு சார்ந்த வார்த்தைகள் சேர்ப்பது, பிரெஞ்சு கலை, புத்தகம் என அடுக்குவது, சமையல் குறிப்பு, மீன் எப்படி வாங்குவது, அவர் வீட்டு நாயின் குறிப்பு என தன் விட்டேத்தி எழுத்தில் ஒரு பெருமை வேறு?
புதிய எக்சைல் விமர்சனம்?
காசு கொடுத்து வாங்க ஏன் ஓசியில் படிக்கக்கூட தகுதியில்லாதது. நேர விரயம்.

No comments:
Post a Comment