எங்கு திரும்பினாலும் ஸ்மார்ட் போன் மயம்தான் ! காலை புலர்வதே gmail, whatsapp, facebook மற்றும் twitter'இல் தான் !
ஸ்மார்ட் போன்கள் அதிகமாக புழக்கத்தில் வர ஆரம்பித்தது 2011'இல் தான். இதை இன்றைய வடிவில் அறிமுகம் செய்து கொள்ளை இலாபம் பார்த்தது சாம்சுங் நிறுவனம். இன்று ஊறுகாய் குழுமங்கள் எல்லாம் ஸ்மார்ட் போன் தயாரித்து விற்க ஆரம்பித்துவிட்டன. எத்தனை கம்பெனிகள் ஸ்மார்ட் போன் தயார் செய்கின்றன என்று பரீட்சை வைக்க கூடிய அளவுக்கு வித விதமான ஸ்மார்ட் போன்கள் உள்ளன. இவற்றில் பெரிய கேள்வி - உண்மையில் இவை அவசியமா?
10 வருடங்களுக்கு முன் வண்ண அலைப்பேசி என்றால் அது நோக்கியா 6030 தான் - வெறும் பிங்க் நிற திரையை வண்ண அலைப்பேசி என்று விற்ற காலம் அது ! அப்போதெல்லாம் நோக்கியா calculator அளவில் அலைபேசியை விற்கும் ! இவற்றை PDA என்றழைப்பர் !