Tuesday, 11 February 2014

இசையில் இழை #1: இதயத்திலிருந்து சில ஸ்வரக்கோர்வைகள் - 1

இத்தொடருக்காக எந்த பாடலை முதலில்  எடுத்துக்கொள்வது என்ற குழப்பமே இல்லாமல் நான் எடுத்துக்கொண்ட பாடல் "அங்கும் இங்கும் பாதை உண்டு" !!! மெல்லிசை மன்னரின் மிகச்சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.  இசைஞானியின் பாடல்களில் இருந்து இவரது பாடல்களில் சில வேறுபாடுகள் இருக்கும். இவர் வாத்தியகோர்ப்புகளை  விட பாடலில் பல நுணுக்கங்களை ஒளித்து வைப்பார் ! இவரின் இசை 80களுக்கு முந்தைய ரசிகர்களுக்கு, குறிப்பாக 60களில் பிறந்தோருக்கு,  மிகவும் பிடித்தமானவை.  பாடலுக்கேற்ற வரிகள் எடுத்துகொள்வது அல்லது குறிப்பிட்ட சூழலுக்கேற்ற பாடலை வடிவமைப்பது இவருக்கு மிகவும் எளிது .  இதற்கு உற்ற துணை - கவியரசின் வரிகள் மற்றும் 60களில் டி.எம்.எஸ், சுசீலா பிறகு எஸ்.பி.பியின் வருடும் தென் குரல்கள்.!!

இந்த பாடலும் எம்.எஸ்.விக்கே உரித்தான ஒரு பாடல் ! பாடல் ஒரு ghazal பாடலை போல் மெல்ல வருடி செல்லும் ; எம்.எஸ்.வி 70களில் அமைத்த பெருவாரியான பாடல்கள் ghazalகளை ஒற்றியே இருக்கும்.  ghazal பாடல்கள் நுணுக்கமான ராக இலட்சணங்களையும்  மிக சிறந்த பாடல் வரிகளையும்  கொண்டிருக்கும்; பெரும்பாலும் அன்பு, காதல், இவற்றை மிக அழ்காக வெளிப்படுத்தி நம் உள்நிலைக்கு அமைதியான ஓர் ஆனந்தத்தை தரும். இப்பாடலும், என்னை பொருத்தவரை அவ்வகையினை  சேர்ந்ததே. மேலும்   கவியரசின் வரிகள் இந்த மொத்த படத்தின் கதையும் சொல்லிவிடும் ."கதை எழுதி பழகிவிட்டாள் -முடிக்க மட்டும் தெரியவில்லை " "அவள் எழுதும் கவிதைகளை விதி புகுந்தே திருத்துதம்மா " போன்ற வரிகள் நம்மை புன்னகை பூக்க வைக்கும். இப்பாடலின் அமைப்பு ரஜினிகந்தா என்ற ஹிந்தி படத்தில் சலில் சௌத்ரி இசையமைத்த கை பார் யுன்ஹி தேக்ஹா என்ற அற்புதமான பாடலை ஒத்திருக்கும்.  ஆனாலும் எம்.எஸ்.வி அவருக்கே உரித்தான வகையில் அந்த பாடலின் சாயல் துளி கூட தெரியாத விதத்தில் மெட்டமைத்திருப்பார் .  மேலும், எஸ்.பி.பி இதை அனுபவித்து  பாடிய விதம் மற்றும் அவர் பாடிய பல நுணுக்கமான சங்கதிகள்  இதை வேறு யாரும் பாடி கெடுக்காமல் இருக்க வேண்டுமே என்று நம்மை பதைபதைக்க வைக்கும் !

இப்பாடல்களின் youtube link இதோ :

Kai baar yunhi dekha (Rajnigandha)


Angum ingum

No comments:

Related Posts