Wednesday, 5 February 2014

சினிமா விமர்சனம் #1: பிக் பிஷ்






சிறுவயதில் இருளைக்கண்டு பயந்த போது, நம் அப்பா எதாவது குட்டி கதைகள் (அ) கிளைக்கதைகள் சொல்லி நம்மை தூங்க வைப்பதுண்டு. பாலக மனத்தில் பயம் நீங்கினாலும் , நம் அப்பா அதிலிருந்து நம்மை மீட்டு விடுவார் என்ற நம்பிக்கை உருவாகிறது.படிப்படியாக நாம் நம் அப்பாவின் நடவடிக்கையை கண்டு பெருமிதம் கொள்வோம், ரசிகன் ஆவோம்.நமது அடுத்தடுத்த செய்கைகளில் நமது inspiration ஆக அவர் இருந்திடுவார். 

காலப்போக்கில் நம்மை நாமே அறிந்து கொள்ளும் தருணம் வரும் வயதில், அவர் மீது ஈர்ப்பு குறையும், மாறும் , மழுங்கும் (அ) இல்லாமல் போய் விடும். ஈர்ப்பு கூடும் என்பது அரிதே.

இது பெரும்பாலானோர் வாழ்க்கையிலும் ஒரு அத்யாயமே. அப்பா மகன் உறவை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் சமீபமாக(2005 பிறகு) வந்த படங்கள் அதிகம். (தவமாய் தவமிருந்து, எம் மகன், சந்தோஷ் சுப்ரமணியம், வாரணம் ஆயிரம் மேலும் சில). ஒவ்வொரு படமும் ஒரே மையக்கரு இருந்தாலும் கதை அமைப்பில் சற்று வித்த்யாசம் தென்படும். [நமக்கு வாரணம் ஆயிரம் படம் தவிர மத்தது எல்லாமே பிடித்தம் தான்].

இவ்வகை படங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் நீங்கள் Big Fish படத்தை ரசிக்கலாம்.


தனது திருமண விழாஇறுதியில், தனது சிறு வயதில் சொன்ன தற்பெருமை கதைகளை , அப்பா(Edward Bloom) எல்லாரிடமும் வயது வரம்பு பார்க்காமல் அனைவரிடமும் பகிர்கின்றார். கேட்பவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கேட்பதால், இம்மாதிரியான கதைகள் சொல்வது அவருக்கு மிகவும் பிடித்தம். ஆனால் மகனுக்கோ(Will Bloom) இதை மீண்டும் மீண்டும் கற்பனை செய்து பழக்கப்பட்டதால் மிகவும் மொக்கையாக இருப்பதென்று உள்ளுக்குள் ஒரு புழுக்கம். அதனால் மோதிரம் மாத்திய கையோடு அந்த Marriage Hall ஐ விட்டு வெளியே வந்துவிடுகிறான்.

தனிக்குடித்தனம் செல்லும் முன்னர் தனது மொக்கையான அனுபவத்தை தன் அப்பாவிடம் எடுத்து கூறுகின்றான்.
"இனிமேல் இது மாறி ப்ளேடு போடாதீங்கப்பா தாங்க முடீல" என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறான்.
அப்பாவும் "உனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது என்றால் இத்தோடு நான் நிறுத்திக்கிறேன்" என்கிறார்.
"அப்பா ! எனக்கு மட்டும் தர்ம சங்கடம் கெடயாது அது உங்களுக்கும் தான், உங்க கதைல பாதி உண்மை கெடயாது, சும்மா அது செஞ்சன் இது செஞ்சன் சொல்றீங்க, எத்தன பேரு இத அமைதியா கேட்பாங்க ? இது ஏன் உங்களுக்கு புரிய மட்டேன்குதுனு தெர்ல " என்று கூறி வெறுப்புடன் பிரிந்து செல்கிறான்.

பின்னர் கதை தடம் மாற்றம் (தடுமாற்றம் அல்ல !) அப்பாவின் இளம் வயது பயணங்களை , வீர தீர சாகசங்களை ஒரே சீராக ப்ளாஷ்பக் காட்சிகள். அதில் அவர் தனது ஊரிலேயே(Ashton) மிகப்பெரிய சீக்காளி, இந்த ஊர் ஒரு சிறிய pond என்றும் தான் ஒரு பெரிய Fish என்று நம்பிக்கை கொள்கிறார். அந்த ஊரை விட்டு செல்கிறார், வேறோரு ஊர் போகும் வழியில் யாரும் உபயோகம் செய்யாத பாதையை அவர் தேர்ந்தெடுக்கிறார். அது ஒரு பசுமையான நகரத்திற்கு(Spectre) வழி கொண்டுள்ளது. அங்கு சில காலம் கழித்து அந்த ஊரும் ஒரு சிறிய pond என்று நினைக்கிறார். பின்னர் அங்கிருந்தும் விடை பெறுகிறார். பின்னர் வேறொரு ஊர் சென்று அங்கிருக்கும் circus இல் ஒரு அழகியை காண்கிறார், அவரை மணக்கிறார். பின்னர் ஒரு வெளியூரில் தங்கி அங்கு வேலையில் சேர்கிறார், தனது உழைப்பால் நிறைய காசு பார்க்கிறார். மீண்டும் சொந்த ஊர் திரும்பும் போது தான் அந்த பசுமை நகரம் Spectre சின்னாபின்னமாகி கிடப்பதை கண்டு அதிர்ர்ச்சி ஆகிறார். கையில் வைத்த பணமும் நண்பரிடம் கடன் வாங்கியும் அந்த ஊரை புனர் நிர்மாணம் செய்து அந்த நகரத்தை விட்டு தன் மனைவியை காண வீட்டுக்கு செல்கிறார்.

கதை மீண்டும் அதே தடத்தில், சில ஆண்டுகள் கழித்து, அம்மாவிடமிருந்து மகனுக்கு(Will Bloom) ஒரு phone செய்கிறாள், அப்பாவிற்கு உடல் நலம் குன்றுகிறது என்று கூறுகிறாள். மகன் அவசரம் அவசரமாக புறப்பட தயாராகின்றான், தானும் வருவதாக அவனது நிறை மாத கர்ப்பிணி மனைவி(Marion Cotillard) சொல்கிறாள். இருவரும் மூட்டை முடிச்சு கட்டுகின்றனர்.

உடல் நலம் விசாரிக்கும் நேரத்தில் மருமகளிடத்தில் தனது மொக்கையை continue செய்கிறார் மாமனார். மகன் காண்டாகிறான்(மறுபடியும்). வீட்டில் உள்ள பழைய சாமான்களை ஒழிக்க உதவுமாறு மகனிடம் கேட்கிறார் தாய். அம்மாவின் வேண்டுகோளிக்கிணங்க மகன் பழைய சாமான்களை ஒழிக்கும் நேரத்தில் தன் அப்பா புருடா விட்ட கதைகளுக்கு சான்றுகள் தற்செயலாக கிடைக்கின்றன. இவை கூட தன் அப்பாவின் புருடா சான்றாக இருக்கும் என்ற சந்தேகத்தை தீர்க்க, தன் தந்தையால் புனர் நிர்மாணம் செய்ய பட்ட நகரத்தை நோக்கி கிளம்புகிறான் மகன்.

அங்கு அவன் தந்தை அவனது சிறு வயதில் கூறிய அனைத்து தற்பெருமை கதைகளும் உண்மையா இல்லையா என கண்டுபிடித்து அப்பாவிடம் அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பது மீதி கதை.


படத்தில் நாம நோட் பண்ணவேண்டியது நிறைய. இது ஒரு சாதாரண அப்பா மகன் செண்டிமெண்ட் படமப்பா என்றும் சொன்னாலும், அந்த பிளாஷ்பாக் காட்சிகள் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் career குறித்து முடிவு செய்ய வேண்டிய பாடம்.
திரைக்கதையும் சும்மா கெடையாது (நான் படத்தோட அருமை தெரியாமல் ரெண்டு தடவ தூங்கி படத்த பாதியிலே நிப்பாட்டிட்டன், அலுவல் அயர்ச்சிப்பா :)). கதை இரண்டு தடமாக பிரிந்தாலும், அவை ஒன்னு சேர வேண்டிய இடத்தில் ஒரு seamless fit .



No comments:

Related Posts