Thursday 2 July 2015

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் பாஸ்டன் உரை

ஜெயமோகன் அவர்கள், பாஸ்டன் நகரத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய சாராம்சம் பின் வருமாறு. ஒலி வடிவமாக யூடியூபில் கேட்க கிடைக்கிறது. 

1.புத்தக படைப்பு அனைத்தும் ஒரு நேரடியான அனுபவம் கிடையாது. எழுத்தாளரிடம் இதனை கேட்ககூடாது.
நிகழ்வு உண்மையானதா என்று கேட்டல் நன்றல்ல. புத்தக படைப்பு என்பது கற்பனையும் சார்ந்தது.

2.நேரடியாக அனுபவத்தை எழுதினால் அது செறிவாக இருக்காது.தெரிந்துகொள்ளுவதற்காக அமைக்கப்பட்டது புத்தக படைப்பு அல்ல. கற்பனையை தூண்டுவதற்காக அமைக்கப்பட்டது அது.

3. திரண்ட கருத்து  அல்லது ஒரு மைய கருத்திற்காக ஒரு படைப்பு கிடையாது.  அது அனுபவ பயணம். படைப்பு ஒரு கருத்தை மட்டும் முன்வைத்து படைக்கப்பட்டிருக்காது.

4.ஒரு படைப்பை வைத்தே எழுத்தாளரை எடை போட முடியாது.

5. ஒரு plot மட்டுமே புத்தக படைப்பை தீர்மானிக்க முடியாது.






இன்னோர் உலகம்

No comments:

Related Posts