தாய்மை
தாய்...
தாய்
நாடு தந்தாள்...
தாய்
மொழி தந்தாள்...
தாய்
பால் தந்தாள்...
தன்னையே
தந்து தெய்வமாய் நின்றாள்...
அழுதேன்...
பொறுமை காத்தாள்...
அடம்பிடித்தேன்...
பொறுமை காத்தாள்...
வம்பு
செய்தேன்...
பொறுமை காத்தாள்...
தவறு
செய்தேன்...
பொறுமை காத்தாள்...
பொறுமையையே(தாயையே) பழித்தேன்...
பொறுமை காத்தாள்...
இப்படி
பொறுமையே பொறுமை இழக்க...
நான்
செய்த எல்லாவற்றையும்...
பொறுமை இழக்காமல் புன்னகைத்தாள்...
என்
மகனே என்று...!!!
மே 2014
No comments:
Post a Comment