இந்த உலகில் நாம் எப்படி வாழவேண்டும் என்று நம்மை சுற்றியுள்ள இச்சமூகமே தீர்மானிக்கின்றது... நான் நானாக வாழ முடியவில்லை...
இரக்கப்பட்டால் - ஏமாளீ
ஒதுங்கி வந்தால் - கோழை
ஏற்றுகொள்ளாவிட்டால் - எதிரி
ஒத்தூதினால் - நலவிரும்பி
சமூககோபம்(கொண்டால்) - முட்டாள்
/ உணர்ச்சிவயப்பட்டவன்
இப்படி தன்னுடைய எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் நம்மைச்சுற்றி உள்ளவர்களுக்கு ஏற்றாற்போல் நடித்து, சிரித்து,
குழைந்துவாழ்ந்தால் மட்டுமே நாம் இந்த சமூகத்தால் ஏற்றுக்கொள்ளபடுகின்றோம்.
இல்லையேல் இந்த சமூககூட்டத்தின் நடுவே கைவிடப்பட்ட அனாதையாய் தணிக்கையாக்கப்பட்டு விடுகின்றோம்.
மொத்தத்தில் நான் என் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழமுடியாத இந்தசமூகத்தில் நானும் நல்லவனாய் (நடிகனாய்)
வாழக்கற்றுக்கொண்டேன்.
இவண்,
No comments:
Post a Comment