Monday, 15 June 2015

கவிதை முயற்சிகள் #2


இவன் எந்த வர்க்கம்?

 உழைப்பிலிருந்து திமிரை எடுப்பவன் தொழிலாளி வர்க்கம்.
உழைப்பின் பணத்திலிருந்து திமிரை எடுப்பவன் முதலாளி வர்க்கம். 
****************************


இசை வரிசை

இளையராஜாவின் இசை  
எனது பால்யத்தை  நினைவூட்டியது,

ரகுமானுடையது, இளமையின் நரம்பில் சேர்ந்தது,
ஆனால் அனிருத்துடையது, 
இளசுகளின் மேல் வெறுப்பை உண்டாக்கியது,

ஒருவேளை நான் வயோதிகன் ஆனேனா 
என்னும் கேள்விக்கு பதில் தேட,

இப்போது சந்தோஷ் வந்திருக்கிறார், 
இளசுகளின் மேல் உள்ள அந்த வெறுப்பு 
இனிதே அகன்றது.  
************************

பகுத்தறிவு


சோளக்கொல்லை பொம்மையின் மீது 
பறவையின் எச்சம்.

விடுப்புமுனி
இன்னோர் உலகம்

No comments:

Related Posts