Wednesday, 29 November 2017

எந்திரன் யார்?

ஹலோ?
வணக்கம் மேடம், கேர்டல் லேர்ந்து பேசுறோம். கவர்மென்ட் உத்தரவுப்படி உங்க ஆதார் கார்ட அருகாமைல இருக்குற எங்க ஷோரூம்ல காட்டி உங்க கேர்டல் நம்பர இன்னிக்கு மதியத்துக்குள்ள இணைச்சிடுங்க மேடம்.

செரி.

இல்லன்னா, உங்க நம்பருக்கு கால் எதுவும் வராது மேடம், பார் ஆகிடும்.

ஏம்மா, கவர்மென்ட் சொன்னது இன்னும் மூணு நாலு மாசத்துக்கு அவகாசம் கொடுத்துருக்காங்க. , நீங்க பாட்டுக்கு இன்னிக்கு இப்போன்னு உத்தரவு போடுறீங்க? ரூல்ஸ் தெரியாம வற்புறுத்தக்கூடாது, வேரயார்க்கிட்டயாவது சொல்லுங்க கேப்பாங்க.

டக்.
**

ஹலோ?
வணக்கம் மேடம், கேர்டல் லேர்ந்து பேசுறோம். கவர்மென்ட் உத்தரவுப்படி உங்க ஆதார் கார்ட அருகாமைல இருக்குற எங்க ஷோரூம்ல காட்டி உங்க கேர்டல் நம்பர இன்னிக்கு மதியத்துக்குள்ள இணைச்சிடுங்க மேடம்.

அயுயோ, ஆதார் கார்டே எனக்கு இல்லியேம்மா. இனிமேல் தான் எடுக்கணும்.

ஒகே மேடம்.

டக்.
**

ஹலோ?

வணக்கம் மேடம், கேர்டல் லேர்ந்து பேசுறோம், கவர்மென்ட் உத்தரவுப்படி உங்க ஆதார் கார்ட.

டக்
**

ஹலோ!
வணக்கம் சார், கேர்டல் லேர்ந்து பேசுறோம்.

சொல்லுங்க

கவர்ன்மென்ட் உத்தரவுப்படி உங்க ஆதார் கார்ட .......... மதியத்துக்குள்ள இணைச்சிடுங்க சார்.

டக்
**

என்னடி வா, ஸ்நாக்ஸ் சாப்ட போலாம்.
இரு வர்றேன்?

ஊருக்கே ஆதார இணைக்க  சொல்றோமே, அத நானே எடுக்கல.. ஹிஹி.. என்ன பண்ற? ரிப்போர்ட்டா எடுக்குற, என்கிட்டே ஒருவார்த்த?

நீ எடுக்கலையா?

இல்ல?

 ஏன் இவ்ளோ கம்மியான கால் நம்பர்னு எப்படி இருந்தாலும் திட்டத்தான் போறான், அதுக்கு சீக்கிரம் அனுப்ச்சிட்டு ஊட்டுக்காவது போலாம்.

இருடி அப்ப நானும் முடிச்சிர்றேன்.

அனுப்சிட்டேன் ரிப்லையே பண்ணல, ஓ மீட்டிங்கா? என்ன பண்றது, இங்கியே தங்கிர்னுமா என்ன? வாடி போலாம்.
**

என்ன அதுங்க ரெண்டும் இப்பவே கெளம்புதுங்க?
அதுங்கள விடுங்க சார். அதான்இப்போ ஆட்டோமேஷன் மைக்ரேஷன் த்ரூ பண்ணிட்டாங்களே, எத்தன நாளைக்கு இதுங்களோட அட்டெண்டன்ஸ் டைம்ஷீட் பாத்துட்டு இருப்பீங்க?

சீக்கிரம் எல்லாருக்கும் தகவல சொல்லிடுங்க, காலம் போன பிறகு சொல்லிப் பிரோஜனம் இல்ல. hr கிட்ட சொல்லி சம்பளத்தையும் முடிச்சிவிட சொல்லுங்க. இழுத்துகிட்டு இருக்கும் அப்புறம்.
**

ஹலோ.

ஹலோ... சொல்லுங்க சார், ஆபிஸ் வந்துட்டே இருக்கேன்.

ஒண்ணும் பிரச்சன இல்ல, ஏம்மா மெயில் அனுப்பிருக்கேன், பர்மனென்ட் ஆக்க முயற்சிக்குறேன் முடில. நோட்டிஸ் ஆரம்பிச்சுட்டதுனால, இந்த மாசம் சம்பளத்துல கைய வைக்க மாட்டாங்க, வேற ஆப்ஷன பாத்துக்கோங்க. இன்னிக்கு ஆபிஸ் வரணும்னு அவசியமா பாத்துக்கோங்க. பெண்டிங் எல்லாத்தையும் க்ளோஸ் பண்டீங்கல்ல?

.. (மௌனம்)..................... பண்ட்டேன் சார். இல்ல...
எல்லாம் கேட்டுப்பார்த்துட்டேன்மா அவனுங்க கேக்குற மாதிரி இல்ல, எனக்கும் வேற வழி இல்ல.

சரி சார்.

டக்.
**

ஹலோ சார்?

ஏம்மா மெயில் அனுப்பிருக்கேன், பர்மனென்ட் ஆக்க முயற்சிக்குறேன் முடில. நோட்டிஸ் ஆரம்பிச்சுட்டதுனால, இந்த மாசம் சம்பளத்துல கைய வைக்க மாட்டாங்க, வேற ஆப்ஷன பாத்துக்கோங்க. பெண்டிங் எல்லாத்தையும் க்ளோஸ் பண்டீங்கல்ல?

..(மௌனம்) எஸ் சார். என்னை மட்டும்தான் இப்படி பண்ணிருக்கீங்களா சார்?

உனக்கு முன்னாடி அவகிட்ட சொல்லிட்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் அவகிட்டயும் சொல்லிட்டேன்.

டக்.
**

என்னபா, ஸ்நாக்ஸ் சாப்ட போலாமா?

போலாம்.. போலாம்..

ரிப்போர்ட்டா எடுக்குற, என்கிட்டே ஒருவார்த்த?
நீ எடுக்கலையா?

இல்ல?

இருக்குற 30  பேருகிட்ட  பேசி அனுப்புறதுக்கு ஒரு வாரமான்னு எப்படி இருந்தாலும் திட்டத்தான் போறான், அதுக்கு சீக்கிரம் ஊட்டுக்காவது போலாம்.

No comments:

Related Posts

  • Bloggers Intro #3: CyberHe@d
    05.02.2014 - 0 Comments
    CyberHe@d Am CyberHe@d, an entry point for trying out new. >>Click here to view…
  • பானை வழி வரலாறு
    01.06.2016 - 0 Comments
    போரூரில் சில வருடங்களாக இருக்கிறேன் ஆனால் இந்த பகுதியின் பெயர் அறியாமலே இருந்திருக்கிறேன். ஸ்டேண்டு ஆட்டோ…
  • தமிழ்க்கவிதைகள் #4 : கேள்விகளும் பதில்களும்
    22.03.2014 - 0 Comments
    இப்படியாகக் கழிகின்றன என்  எல்லாப் பொழுதுகளும்.. வைத்துவிட்டுப் போன புன்னகைகள் திரும்பி…
  • Tweets Digest: #DoomsdayInternet
    04.07.2015 - 0 Comments
    Then God said Let the World create Memes to flood the server space. #DoomsdayInternet Wondering how…
  • Short Stories #7: Step Up
    03.04.2014 - 0 Comments
    He stepped down from the dais. The crowd gave him a standing ovation. People admired him for his…