Tuesday, 1 April 2014

தமிழ்க்கவிதைகள் #6: பவதி பிக்‌ஷாம் தேஹி


எப்படியாவது 
இந்த புன்னகையை
தக்கவைத்துக் கொள்ள முயல்கிறேன்

சத்தியமாக எனது
இல்லாதவைகளை உன்னிடம் நான்
திணிக்கவில்லை
நீ அன்று உணர்ச்சிவயப்பட்டு
குத்தினாயே
அந்த
கத்தி மீதோ உன்மீதோ
எனக்கு எந்த புகார்களுமில்லை
நாம் வேடிக்கை பார்க்கும் ஆற்றில்
நாம் துப்பிய எச்சில்
எத்தனை விநாடிகளில்
காணாமல் போகிறது என்பதற்கு
எப்போதும் உன்னிடம்
நான் பந்தயம் கட்டியதில்லை

முடியவில்லை எனினும்
எப்போதும் தனியாகவே நடக்கிறேன்
முத்தத்தைத் தவிர உன்னிடம்
எதுவுமே ஏற்றதில்லை

உன் கால் கடிக்காத
செருப்பைப் போல அல்லாது
உன் கக்கத்தில் அறுக்காத
புதிய ஜாக்கெட்டைப் போலும் அல்லாது
நீ உள்ளே நுழைகையில்
ஏற்கெனவே எரியும்
விளக்கை போலதான் 
இருக்க விரும்பினேன்

நன்று
நடக்கட்டும்
என்னை நீர்ப்பதைக் காட்டிலும்
உன்னைக் கட்டமைப்பதே 
உனக்கு மிக நல்லது

பவதி பிக்‌ஷாம் தேஹி என்பதற்கும்
த்தா.. சோறு போட்றீ
என்பதற்கும் வேறுபாடு உண்டா என்ன..

No comments:

Related Posts

  • அனுபவங்கள் : தொடு அலைப்பேசி [smartphone] அவசியமா?
    01.07.2015 - 0 Comments
    எங்கு திரும்பினாலும் ஸ்மார்ட் போன் மயம்தான் ! காலை புலர்வதே gmail, whatsapp, facebook மற்றும் twitter'இல்…
  • Life art #2: The different kinds of people in your friends circle
    24.03.2014 - 1 Comments
    Any resemblance to characters living or dead is purely coincidental. The Emotional/Enthu Person He…
  • எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் பாஸ்டன் உரை
    02.07.2015 - 0 Comments
    ஜெயமோகன் அவர்கள், பாஸ்டன் நகரத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய சாராம்சம் பின் வருமாறு. ஒலி வடிவமாக…
  • Short Stories #1: Salary day
    25.03.2014 - 4 Comments
    Salary day. It was her first earning. A wallet filled with fresh currency notes. She boarded a bus in…
  • Bloggers Intro #7: Aravind
    07.02.2014 - 0 Comments
    Aravind Hi guys, I'm new to blogging world and I've always wanted to write about my perspectives…