Thursday 11 June 2015

கவிதை முயற்சிகள்

ஜனரஞ்சகம்


நீயா நானா பகுதி எப்படி இத்தனை பேருக்கு
பிடித்தமாக இருக்கிறது?

குடும்பத்தலைவன் ஆர்வமாக பங்கேற்பாளர்களின்
பேச்சுகளை உன்னிப்பாக கவனிக்கிறான்,

இடையினில் வரும் விளம்பரங்கள்...
குழந்தைகளுக்குப் பிடித்துப்போகிறது,

அதன் இடையினில் வரும் சீரியல் ப்ரோமோக்கள்
குடும்பத்தலைவிக்கு..

ஒருவேளை இதுதான் ஜனரஞ்சகமோ?

******************************************************

அந்த  பல்லிளித்த கணம்




பல்டாக்டர் "இத நான் ரெக்கமென்ட் பண்றேன்"
என்று சொல்லும்பொழுதில்
படத்தில் இருப்பவர் மாடலே
எனும் கீழே உள்ள புழுக்கை எழுத்தில்
பல்லிளிக்கிறது
டூத்பேஸ்ட் விளம்பரம்.


******************************************************

அசல் நகைச்சுவை


ஆதித்யா தொலைகாட்சியில் ஒரு நகைச்சுவை நாயகனும்
கூட வரும் முன்னணி நாயகனும் ஊரோரம் புளியமரம்
என பாடி கும்மி அடித்ததை பார்க்கும் நேரத்தில்,

தூரத்தில் இருந்த தொலைபேசி அழைப்பு சத்தம் கேட்டது,
அருகில் படுத்துக்கொண்டிருந்த
அறைநண்பன் கையை மட்டும் காதில் வைத்து
"ஹலோ" என்றான் தூங்கியபடியே.

இவனிடம் உள்ள நகைச்சுவை தரத்தை
இனி எங்கே தேடுவேன் நான்.

******************************************************

விளங்காதவன்

 இந்த இயந்திர மனிதர்கள்
பரபரவென சாலையில்

கடந்து போகும் நேரத்தில்
வானில் துருத்திக்கொண்டு தெரியும்

ஒரு வெளிச்ச நட்சத்திரத்தை
ரசிக்கும் நான் வேலைக்காகாதவன் தான்.

விடுப்பு முனி
இன்னோர் உலகம்

No comments:

Related Posts