Friday 5 June 2015

ஊழல், அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் சொந்தமா?



குற்ற வகை : 
ஊழல்.

ஊழல் பெயர் : 
The Forex Scandal or The Foreign Exchange Scandal.
அந்நிய செலாவணி ஊழல்.

ஊழலின் தோராய அளவு : 
குறைந்தபட்சம் 1,20,000 கோடி டாலர்கள் தினசரியாக.
இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.70,00,000 கோடி தினசரியாக.

ஊழல் நடைபெற்ற ஆண்டுகள் : 
2008 முதல் 2013 வரை. ஐந்து வருடங்களாக..

காரணகர்த்தா 

City bank, HSBSC, JPMorgan, RBS, UBS உட்பட 15 பன்னாட்டு வங்கி ஊழியர்கள்.

ஊழல் நடைபெற்ற முறை 
தினசரியாக கரன்சிகளின் மதிப்பை தேர்ந்தெடுப்பதில் நடைபெற்ற மோசடி.

விவரிப்பு:
தினசரியாக, ஞாயிறு தவிர்த்து, காலை 9 மணியிலிருந்து மாலை 5 வரை டாலர், பவுண்ட்ஸ் முதலிய பல்வேறு கரன்சிகளின் மதிப்பு நொடிக்குநொடி வர்த்தக சந்தையில் கூடும் குறையும். இதனால் அன்றைய தினப்படியான ஒரு சராசரியான மதிப்பை வர்த்தகச்சந்தையில் வெளியிடப்படும். ஆங்கிலத்தில் இதனை fix என்றழைப்பர். இந்த fix-ஐ லண்டன் மணிக்கணக்கில் 4 மணிக்கு வெளியிடப்படும். இந்த fix ஐ கணக்கிடுவதில் முறைகேடு நடைபெற்றதுதான் ஊழலின் சாரம்சம். சராசரியாக கணக்கிடாமல் சற்று அதிகமான மதிப்பு வைத்து நிர்ணயம் செய்யும்போது கரன்சிகளின் மதிப்பில் வழக்கத்திற்கும் மாறான அளவில் அதன் மதிப்பு சற்று உயர்வாகவே அதன் fix ஐ செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் பல பண பரிமாற்றத்தில் சில வங்கிகள் எவ்வித சிரத்தையும் எடுக்காமல் கொழுத்த லாபத்தை ஈட்டியது.

அகப்பட்டது எப்படி?
{ப்ளூம்பெர்க் நியூஸ் நிறுவனம் ஒரு செய்தி தொகுப்பை வெளியிட்டது.}
{இந்த செய்திகள் இணையத்தில் சில அனானிமஸ் (பொய் பெயரில் உள்ள) நபர்கள் க்ரூப் வைத்து  போரெக்ஸ் சந்தையை பற்றி பூடகமாக பேசிகொண்டது}
 தண்டனை : 
சம்பந்தப்பட்ட சில வங்கி ஊழியர்கள் மட்டும் சஸ்பெண்டு, கைது மற்றும் அபராதம் Citibank $358, HSBC $343, JPMorgan $352, RBS $344 and UBS $371 மில்லியன்களில்.

ஊழல் தவிர்க்க செய்த நடவடிக்கை :
 முன்பெல்லாம், fix முறை 1 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும், அதனை தற்போது 5 நிமிடமாக மாற்றி அமைத்துள்ளனர்.

ஊழலோ ட்ரில்லியன் டாலர்களில் தினசரியாக ஆனால் அபராதம்  மில்லியன் டாலர்களில். இப்போது சொல்லுங்கள்! ஊழல், அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் சொந்தமா?
அருள் மணிவண்ணன்
1 June 2015
தகவல் உதவி:
பிபிசி, டெலிகிராப் மற்றும் விக்கிப்பீடியா. 

No comments:

Related Posts