Thursday 18 June 2015

எலி ப்ரை - KFC ஸ்பெஷல்

இந்தப்படம்  facebook இல் பதிவேற்றிய சில நாட்களிலேயே சுமார் ஒண்ணேகால் லட்சம் ஷேர்களை பெற்று இருக்கிறது.. எலி வழக்கமான சிக்கன் போல வறுத்து இருந்ததை பார்த்த அனைவருக்கும் பேரதிர்ச்சி அளித்தது.  சில மாதங்களுக்கு முன்பு கேஎப்சி யில் சிக்கனுக்காக வளர்க்கப்படும் கோழிகளும் அதற்கு ஊட்டம் கொடுக்கும் உணவு முறைகளும்  பல சர்ச்சைகள் எழுந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இப்போது இந்த வறுத்த எலி விஷயம்
 கேஎப்சியின் தரத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டேவோரிஸ் டிக்சன்(25) என்பவர் தனது  பேசுபுக் பக்கத்தில் இந்த படத்தை ஏற்றினார். அதன் கூடவே இதையும் சொல்லி இருக்கிறார்





அதற்கு அடுத்த நாளே டிக்சன் ஒரு ரேடியோ  நிகழ்ச்சியில் இவ்வாறு பேட்டி அளித்தார்,
"இதன் வடிவம் வித்தியாசமாக தெரிந்தது, அதனால் சாப்பிடும் முன் கைகளால் அழுத்திப்பார்த்த போது ஏதோ ரப்பர் போல அழுந்தியது, இது என்ன எலியா? என்று அந்த ஏரியா kfc மேனேஜரிடம் விசாரித்தபோது, அவரும் அதையே உறுதி செய்தார். பிறகு எனக்கு வேறு ஒரு உணவை இலவசமாக  தந்தார்".

இந்த போட்டோவின் வரவேற்பை அறிந்து பலர் இதை தங்கள் பக்கங்களில் ஏதோ தங்களுக்கு நேர்ந்தது போலவும் அதை தாங்களே போட்டோ எடுத்து அப்லோட் செய்கின்றனர். அதுவும் பல லைக்குகளை ஷேர்களை அள்ளுகிறது. இது என்ன வைரல் மார்க்கெட்டிங் சோதனை முயற்சியா எனும் கேள்வி எழுகையில்,

இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என KFC நிறுவனம் வழக்கமான அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் "நாங்கள் பதிவேற்றிய நபரை அணுக முயற்சித்தோம் அவர் ஒரு வார்த்தை பேச கூட முன் வரவே இல்லை" என்று  வாதிடுகிறது.  யார்கிட்டேயும் சொல்லிக்கொள்ள வேண்டாம் என்று டீல் பேச  கூப்பிட்டார்களா அல்லது எலி உணவில் எப்படி வந்தது என்ற உண்மையை அறியவா என்பது KFCக்கே வெளிச்சம்.  நிச்சயம் இது பங்குச்சந்தையில் எதிரொலிக்கும்,அவர்கள் வர்த்தகத்தில் இது எதிரொலிக்கும், இவையெல்லாம் சில காலம்தான்.

டிவோரிஸ் டிக்சன் ஏக தினத்தில் உலகளாவிய பிரபலர் ஆனார். எதுவா இருந்தாலும் என்னுடைய அட்டர்னி கிட்ட பேசிக்குங்க என்கிறாரே பார்க்கலாம். அவரது இந்த பேசுபுக் தளத்தில், குவியும் ஆதரவுகளை நீங்கள் இதில் பார்க்கலாம். பலர் அவரது பேசுபுக் சுவரில் நட்பழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று உங்கள் பதிவை நான் இந்தியாவெங்கும் பரப்பி விட்டேன், ஆசியாவில் பரப்பிய முதல் ஆள் நாந்தான், தர்மம் வெல்லும் போன்ற சீரியஸ் காமெடி பதிவுகளை பார்க்க நேரிடும்போது ஷப்பா!, மிடீள..

இந்த KFC எலி பஞ்சாயத்து முடிந்ததும் அவர் உண்டு அவர் வேலை உண்டு அல்லது நாம் உண்டு நமது வேலை உண்டு என்று இருப்போம். இன்னும் சில நாட்களில், குளிச்சேன், அங்கே போனேன் இங்கே போனேன், பார்த்தவுடன் ஷேர் செய்துவிடவும் அல்லது 7 நொடிகளில் ஷேர் செய்யவும் போன்ற சராசரி பதிவுகளை பகிரப்போகிறவருக்கு எதற்கு நட்பழைப்பு கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் மக்கள் உலகில் உள்ளனர் என்றால் அதுவே புண்ணியம்தான். ஆனால்  மற்ற சராசரி பேசுபுக் உபயோகிப்பவர்கள் இந்த ஹோட்டலில் டின்னர் சாப்பிடுகிறேன் போன்ற பதிவுகளை இனி டிக்சன் போடமுடியாது. அதையும் சர்ச்சை ஆக்கிவிடுவர் அவரது பேசுபுக் நட்பு மாந்தர்கள். எனக்குள் எழும் யூகம் என்றால், வழக்கறிஞர் வைத்துக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்ட இவர் ஏதேனும் அறக்கட்டளை ஆரம்பித்து முழு நேர ஓட்டல் சாப்பாட்டு பாதுகாப்பு ஆர்வலர் ஆகிவிடுவாரோ என்று தோன்றுகிறது.

யார் என்ன, எப்படி வேண்டுமென்றாலும் செய்து கொள்ளட்டும். நமக்கென்னவோ நாம் சாப்பிடும் உணவுகளில் இத்தனை லோலாயித்தனங்களா என்பதுதான் மிகவும் பேரதிர்ச்சியாக உள்ளது.  இனி யாரை நம்பி சாப்பிடுவது ? வீட்டு சாப்பாட்டுச்சுவை கசந்தாலும், உடல் நலத்துக்கு பங்கம் விளைவிக்காது என்பது என்னவோ உண்மைதான்.  

இன்னோர் உலகம்

No comments:

Related Posts