Tuesday, 9 June 2015

Link வடிவில் பரவும் காமத்தீ.


1. கம்ப்யூட்டர் வைரஸ் என்பது கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங் தெரிந்த வீணாப்போனவன் எவனோ செய்யும் வெளங்காத வேலை என்பதை அறிக.

2. "நண்பா, இந்த வீடியோல நீ எப்படி இருக்க பாரு" என்று பேசுபுக்கை உழன்றடிக்கும் கிளுகிளு வைரஸ்தான் தற்போதைய இணைய கபாலி. (இன்னும் official ஆக பெயர் வைக்கப்படவில்லை, அதனால் இப்போதைக்கு "நண்பா, இந்த வீடியோல நீ எப்படி இருக்க பாரு" என்றே அழைப்போம்).

3. இந்த link உருவில் பரவும் வைரஸானது நம் இன்பாக்ஸில் வர வாய்ப்பு உள்ளது. அந்த link ஐ நீங்கள் கிளிக் செய்தால் அது பலானது பலானது படங்களை ஒப்பன் செய்ய வல்லது. 






4. அப்படியே நம்மை விட்டுவிடாது இந்த சனி!  பரவுதல் வைரசின் சிறப்பியல்பாம். உங்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்களின் இன்பாக்ஸில் நீங்கள் அனுப்பியது போலவே link போய் சேர்ந்துவிடும்.  எதேச்சையாக நாம் செய்தது போலவே நண்பர்களும் கிளிக் செய்தால் அவ்வளவுதான் வட்டி குட்டி போட்ட கதையாக அவர்களின் நண்பர்களுக்கும் link ஐ இன்பாக்ஸில் அனுப்பிவிடும்.

5. எதற்காக இந்த வேலையற்ற வேலை என்று கேட்பவர்களுக்கு இந்த சூட்சுமத்தின் பின்னணி கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்தான். நீங்கள் பயனுள்ள அல்லது வருமானத்திற்காக ஒரு வலைத்தளம் வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது செழிக்க வேண்டுமாயின் வருகையாளர்கள் அவசியம் அல்லவா? வருகையாளர்கள் அதிகம் வந்தால் தான் விளம்பரதாரர்கள் பணம் தருவார்கள். வருகை புரிபவர்களின் வந்து செல்லும் எண்ணிக்கையை விளம்பரதாரர்களே கண்காணிப்பர். அதனால் எண்ணிக்கையை பொய் கணக்காக காட்ட முடியாது சரியா? உங்கள் நண்பர்கள் ஒவ்வொருவரிடம் சென்று நீங்கள் உங்கள் வலைதள link ஐ கொடுத்து பார்க்க சொல்லவேண்டும். உங்கள் நண்பர்கள் அதில் ஆர்வம் காட்டி கிளிக் செய்தால்தான் புண்ணியம். இது போல் எத்தனை நண்பர்கள் ஆர்வம் காட்டுவார்கள்? ரொம்ப கம்மி.


அதனால் பெரிய பெரிய நிறுவனங்கள் கொஞ்சம் பணம் செலவு செய்து ப்ரோக்ராம்மர்களை சம்பளம் கொடுத்து இப்படி பரப்ப செய்வர். இவர்கள் வலைதளங்களின் link ஐ நண்பர்கள் கும்மி அடிக்கும் தளங்களில்  இப்படி பரவும் படி program செய்துவிடுவதால். பலர் அதனை கிளிக் செய்ய அது அனிச்சையாக வருகையாளர்களாக வலைதளத்தில் பதிவாகி விடும், அதுவும் சில மணி நேரங்களில். அந்த வலைதளத்தில் விளம்பரம் கொடுப்பவனுக்கு தேவை வருகை கணக்குதான் என்றும், அதுவும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு எண்ணிக்கை எகிறிக்கொண்டே இருக்கும். நாம் மேற்சொன்ன பலானது link செயல்படுவதும் இந்த காரணத்தினால் தான் சூட்சுமம் ஓரளவிற்கு புரிந்ததா ?

6. சரி, தவிர்க்க என்ன செய்யவேண்டும். பேசுபுக்கில் தேவை இல்லாத link ஐ கிளிக் செய்வது உகந்தது அல்ல. சூழ்ச்சி இருப்பதே link உடன் வரும் எழுத்துக்களில் தான். "ஹாய் எப்படி இருக்க, இத கொஞ்சம் பாரேன்" என்று உங்கள் நண்பர் எதாவது link ஐ அனுப்பினால் பதிலுக்கு என்ன link என்று கேளுங்கள். அவர் பதில் சொல்லப்போகும் முன்னர்தான் தன பெயரில் ஏதோ வில்லங்கமாக link ஒன்று நட்பில் பலருக்கு சென்று இருக்கிறது என்று அவருக்கே தெரியவரும். அப்புறம் அவரே சொல்லிவிடுவார் அவர் இதை அனுப்பவில்லை என்று. 

7. இன்னும் சொல்லப்போனால் சில வைரஸ்கள் உங்களது ரிப்ளை வந்தவுடன் பதிலுக்கு சொல்லும் "நம் விடியோ தான் பார்த்தாயா" என்று. இவைகளெல்லாம் மானுட வழக்க உரையாடல்களை தெரிந்து வைத்துகொண்டிருப்பவனால்தான் இப்படியெல்லாம் வைரஸ் ப்ரோக்ராம்மிங் செய்ய முடியும். இதிலிருந்து தப்பிக்க அதிரடியாக தோண்டி துருவும் கேள்விகளுக்கு சரியான பதில்களாக உங்கள் நண்பர்களை கூற வைக்க  வேண்டும். அப்படி சாமர்த்தியமாக புரிந்து பதில் சொல்ல வைரஸ்களால் எப்பவும் முடியாது. அதை வைத்து கண்டு பிடித்து விடலாம். இவ்வழிமுறை ரொம்ப கஷ்டம் என்றால், அந்த வீணாப்போன உப்புசப்பில்லாத link ஐ உதாசினப்படுத்துங்கள் நேரில் பேசியபின்பு அதனை திறந்துகொள்ளலாம். 
8. முன் பின் தெரியாத பெண் போட்டோ கொண்ட ப்ரொபைல்கள் நமக்கு இன்பாக்ஸில் link அனுப்பி chat செய்ய ஆரம்பிப்பது இப்படிப்பட்ட வைரஸ்கள் தான். "சீ, போடி வேலைய பார்த்துகிட்டு" என்று சொல்வது உங்கள் மன ஆறுதல்களுக்கு மட்டும்தான் உதவும். முடிந்தால் Support பிரிவில் ரிப்போர்ட் செய்ய பழகுங்கள்.

9. எந்த ஒரு மனிதனின் internet வழி செய்கைகளை ஒரு programmer நினைத்தால் automated அல்லது இயந்திரத்தனமாக மாற்ற முடியும். புரியவில்லையா, நீங்கள் உங்கள் நண்பர்களிடத்து சொல்லும் ஹாய் வார்த்தையை பல நண்பர்களுக்கு ஒரே நொடியில் அனுப்ப வைரஸ் ஐ செயல் பட வைக்கலாம். facebook,google போன்ற பெரிய பெரிய ஜாம்பவான் தளத்திலேயே இப்படி விளையாடுகிறார்கள் என்றால் சல்லிசான தளங்களை பயன்படுத்துவோரை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.

இந்த கட்டுரை சொல்ல வந்தது இதுதான் அல்லது நாம் கடைப்பிடிக்க வேண்டியது  இது ஒன்று தான்...
தேவையற்ற link-குகளை கிளிக் செய்தல் தவிர்ப்போம். 

10. Link உருவில் பரவும் இத்தகைய காமத்தீயை அணைக்க முடியாது, வேண்டுமென்றால் click செய்யாமல் தவிர்க்கலாம்.



-முற்றும்-


No comments:

Related Posts

  • Life art #1: You are tired of your job. Aren't You? Here's what you can do
    23.03.2014 - 6 Comments
    This post is specifically targeted at people in the 25-30 age group. The unmarried ones. We have…
  • Short Stories #6: iPhone jPhone.
    31.03.2014 - 0 Comments
    “Dei! What da iPhone jPhone? End of the day, the purpose of a phone is to talk and convey the message.…
  • தமிழ்க்கவிதைகள் #3 : ஊமையாகிப் போன அலைபேசி
    09.03.2014 - 0 Comments
    காலையிலிருந்துஅழைப்பே வராதஅலைபேசி வைத்திருப்பவனின்அலைபேசியில்548 எண்கள் இருக்கின்றன..ஒரு வீட்டுமனைவாங்கச்…
  • The first and best sign you make in internet when you were bored to death.
    18.05.2015 - 0 Comments
    "qwertyuiopasdfghjklzxcvbnm" Have you ever came across this weird word? I dont know too. I was bored to…
  • சிறுகதைகள் #3: நொந்தகுமாரன் கலம்பகம்
    09.03.2014 - 0 Comments
    'அப்பானு ஒன்னெலாம் சொல்லி ரொம்ப நாளாச்சி, வெளிலதான் வா,போனு சும்மா கூப்பிட்றேன், உள்ளுக்குள்ள அந்த…